புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து
ஆமாப்ப பட்டையைத்தான் வெட்டிவந்து
அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு
காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
... கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து
நேமப்பா அஞ்சுதரம் பாவினையே செய்து
சிறப்பான வெருகடிதூள் கொண்டிடாயே
கொண்டிடவே யனுபான வகையைக்கேளு
மத்தித்து தேனதிலே குடிப்பாயே நாற்பதுநாள்
விண்டிடவே யந்திசந்தி கொள்ளுகொள்ளு
மெய்யெல்லாங் கருங்கல்லின் வைரம்போலாம்
துண்டிடவே நரை திரையு மேல்லாம்போகும்
சுக்கிலந்தான் மேலேறும் கீழோடாது
கண்டிடவே யாருதளம் வெளியே காணும்
காலனுமே அஞ்சிடுவான் காணுங்கானே
நந்தீசர் சகலகலை ஞானம் -1000
நாம் காயகற்ப மருந்துகளைத்தேடி எங்கேயும் காடு மலைகளில் அலைந்து திரியாமல்
வீட்டிலிருந்தபடி சுலபமாக செய்து சாப்பிட்டு உடலைக் கற்ப தேகமாக
மாற்றிக்கொள்ள நந்தீசர் பெருமான் அருளியுள்ளார்
தமிழ் நாட்டில் எங்கும் சாதாரணமாக காணக்கிடைக்கும் வேப்பமரத்தை நூறாண்டு
சென்ற வயதான மரத்தை தேடி அதன் பட்டையை வெட்டிவந்து மேலே உள்ள கடினமான
பகுதியை நீக்கி விட்டு உள்ளே உள்ள வெண் சதைப் பகுதியை எடுத்து நிழலிலேயே
நன்கு காய வைத்து உரலிலிட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும் இதில் வெண்
கரிசலாங்கண்ணி சாறு ,கொத்தமல்லி இலையை இடித்த சாறு இரண்டும் சமமாகக்கலந்து
வேம்பு பட்டை தூளில் கலந்து அது முழுகும் அளவு சாறு விடவும் இதை வெயிலில்
வைத்து காயவிடவும் இந்த மூலிகை சாறுகள் நன்கு வற்றியவுடன் மீண்டும்
மேற்கண்ட சாறுகளை ஊற்றிக்கலந்து வெயிலில் காயவிடவும்
இப்படி
ஐந்து முறை செய்யவும் இதற்க்கு பாவனை என்று பெயர் இந்த முறையில் தயார்
செய்த சூரணத்திற்கு "வேம்பு கற்பசூரணம்"என்று பெயர் இதனை பாட்டிலில் பதனம்
செய்யவும் இதனை வெருகடியளவு என்பது ஐந்து விரல் கூட்டி எடுத்து (ஒரு டீ
ஸ்பூன் அளவு)எடுத்து தரமான தேனில் கலந்து அந்தி சந்தி (காலை -மாலை)என
நாற்பது நாள் உண்ணவும்
இதனால் தேகம் வைரம் போல் இறுகி நாடி
நரம்புகள் முறுக்கேறும், தசைகள் இறுகும், தலைமுடி நரை மாறும்
,பார்வைத்திறன் அதிகரிக்கும், உடல் இளவயது தோற்றம் பெரும், மற்றும்
சுக்கிலம் எனப்படும் விந்து திடப்படும், உடல் உறவில் அதிகநேரம் நீடிக்கும்
குண்டலினி யோகப்பயிற்சி செய்வோருக்கு பேரின்பசித்தி கிட்டும் மற்றும்
ஞானத்தின் ஆறு நிலைகளையும் கண்டு உணரலாம் எனவும் இந்த "வேம்பு கற்பம்"
உண்டவனைக் கண்டு காலன் என்ற எமன் அஞ்சுவான் என குறிப்பிடுகின்றார்
இப்படி மகத்துவம் வாய்ந்த "வேம்பு கற்ப சூரணம்"செய்து உண்டு அனைவரும் பெரும் பயனடையலாமே.
நறுந்தாளி நன்முருங்கை தூதுளை பசலை
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழிஎன
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம்
பின் வாங்கிக் கேள்
...
இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75%
வீதம் ஆண்மைக்குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
"கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு
உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை,இன்றைய கலாச்சார
சீரழிவு,மற்றும் past food எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை
ஏற்பட்டுள்ளது.ஆண்மைக்குறைவினால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடம்
கருத்து வேறுபாடுகள் தோன்றி விவகாரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக
உள்ளது
.
ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழிமுறைகளை
சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர்.இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து
முறைகள் ஏராளமாக உள்ளது அதில் ஒரு முறைதான் மேலே உள்ள பாடலில் உள்ளது.
நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும்
நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை
அடுத்து தூதுவேளை -பசலை கீரை -அரைக்கீரை
இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து
சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என
சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே.!
வள்ளலார் அருளிய ஞான மூலிகைகளுள் தூதுவளைக்கும்
ஒரு சிறப்பிடம் உண்டு. சாத்வீக உணவுகளிலேயே மிகவும் நுட்பமான உணவு
தூதுவளையாகும். கரிசலாங்கண்ணி, பொற்றலை, கையாந்தகரை, தூதுவளை, வல்லாரை
போன்ற ஞான மூலிகைகள் அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமான...ால் புசிக்கப் பெற்று, உலகமெல்லாம் அவரால் பரப்பப்பட்டது.
வள்ளலாருக்கு முன்தோன்றிய சித்தர்கள் மூலிகைகளின் தன்மைகளைப் பற்றிச்
சொல்லியிருந்த போதிலும், வள்ளலார் மூலிகைகளின் குணங்களயும் தன்மைகளையும்
சொல்லியிருப்பது, படிப்பவருக்குப் பசுமரத்து ஆணிபோல் பதியும்.
வள்ளல் பெருமான் தனது திருவருட்பாவில் நித்திய கரும விதி என்ற அகராதியில்,
உணவில் பச்சரிசி சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, தூதுவளை,
பொன்னாங்கண்ணி போன்றவற்றைச் சேர்க்கும்படி கூறுகிறார்.
தூதுவளைக்
கீரையுடன் மிளகு ஒரு பங்கு, சீரகம் காலே அரைக்கால் பங்கு, வெந்தயம் கால்
பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு
சேர்த்துச் சமைக்க வேண்டும் என்றும்; வெங்காயம், பூண்டு, பெருங்காயம்
ஆகியவற்றை இத்துடன் சேர்க்க வேண்டாம் என்றும் கூறுகிறார். இதிலிருந்து
தூதுவளையின் மகத்துவம் நமக்குப் புலனாகிறது.
சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முக மாதே தெளி
...
- மூலிகை குணபாடம்.
இதன் இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து
காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும், இவர்களைப் பெண்கள் இச்சை கொள்வர்.
இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு
வேளையும் 2 -முதல் 4 - கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும், அழகு
பெரும்.
பாம்பு கடிக்கு இதன் இலையை க் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும் .
வெண்காரத்தை இதன் இலைச் சாற்றில் அரைத்து புடமிட நீறும். (பற்பமாகும்)
ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன்
வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம்
அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு
சூர்ணம் செய்து உண்டு ஞாபக ம...றதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம்.
செய்முறை :
1 - வல்லாரை இலை - 70 -கிராம்
2 - துளசி இலை - 70 -கிராம்
3 - சுக்கு - 35 -கிராம்
4 - வசம்பு - 35 -கிராம்
5 - கரி மஞ்சள் -35 -கிராம்
6 - அதிமதுரம் -35 -கிராம்
7 - கோஷ்டம் - 35 -கிராம்
8 - ஓமம் - 35 -கிராம்
9 - திப்பிலி - 35 -கிராம்
10 - மர மஞ்சள் - 35 -கிராம்
11 - சீரகம் - 35 -கிராம்
12 - இந்துப்பு - 35 -கிராம்
இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன்
எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து
தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.
உண்ணும் முறை :
காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும்.
இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும்
உண்டு வர வேண்டும்.
ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி
நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும். மேலும் உடலில் சுறுசுறுப்பு
உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் காப்பாற்றும்
சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதாவது சிவன்
சொத்தினை அபகரித்து அனுபவிப்பவர்களது குலம் நாசமாகும் என்பது இதன்
பொருளாகும். இது உலகில் பொதுவாழ்வில் சிவன்;கோவில் சொத்தினை அபகரித்து
அனுபவிப்பா...ர்களது குலத்தினை நாசம் செய்யும் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
இது சரிதான் என்றாலும், இந்தப் பழமொழியில் உள்ள மறைவான பொருள் வேறு
ஒன்றும் உள்ளது. சிவனார் வீரியம், சிவனார் விந்து என்ற பெயர்கள்
பாதரசத்திற்கு உண்டு. அத்தகைய பாதரசத்தினை சிவனது சொத்தினை
பயன்படுத்துபவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதே மறைபொருளாகும்.
அவர்களது குலம் எப்படி நாசமாகும் என்பதை இந்தப் கட்டுரையை முழுமையாகப்
படிக்கும்போது உங்களுக்குப் புரியும்.
பாதரசத்தினை மருந்துக்கோ,
இரசவாதத்திற்கோ பயன்படுத்தும் முன்பு அதன் தோஷங்களை நீக்குவதும், சட்டை
எனப்படும் வேறு உலோகக் கலப்புக்களை நீக்குவதும் அவசியமாகும். பாதரசத்தில்
எட்டுவகையான தோஷங்கள் உண்டு. அதேபோல் ஏழுவகையான சட்டைகள் உண்டு.
இவற்றை முறைப்படி நீக்கிய பின்னரே இரசத்தினைப் பயன்படுத்தவேண்டும்.
இல்லாவிட்டால் பலவித தீமைகளுக்கும், நோய்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும்.
எட்டுவகையான தோஷங்கள், அவற்றினால் உண்டாகும் நோய்களையும் முதலில்
காண்போம்....
தொடரும்..
சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றோர்
காடுகளிலும், மலைகளி லும், வனங்களிலும் குடில் அமைத்தும்,குகைகளிலும் தவம்
இயற்றி வாழ்ந்து வரும் காலங்களில் கொடிய மிருகங்கள் மற்றும் விஷ
ஜந்துக்களின் இடர்... பாடுகளில் இருந்து காத்துக் கொள்ள, கட்டுக்குள் கொண்டு வர பல அதிசய மூலிகைகளையும், சூட்சும மந்திரங்களையும் கையாண்டு வந்துள்ளனர்.
அவைகளில் ஒன்றுதான் "பொன் ஊமத்தை" என்ற மூலிகை ஆகும். இம் மூலிகையைப் பற்றிய அகத்தியர் பெருமான் பாடல்...
காணவே பொன்னி னூமத்தை மூலி
கருவான மூலியடா கந்தர் மூலி
பாணமாம் பச்சையது தழையினாலே
பாருலகில் சொர்ணமதைக் காணலாகும்
தோணவே சாரதனைப் பிழிந்துமல்லோ
தோராமல் ரவிதனிலே காயவைத்து
மாணவே செம்புருக்கி கிராசமீய
மன்னவனே பசுமையடா தங்கந்தானே
தங்கமா மூலியது தழைதானாகும்
சாங்கமுடன் சொர்ணமென்ற பீசமாகும்
சிங்கமதைத் தான்மயக்குந் தழை தானாகும்
புகழான காயாதி இதற்கொவ்வாது
எங்கேனுந் தேடியுழைந் தலைந்திட்டாலும்
என்மகனே விதியாளி காண்பான் தானே
காண்பானே தழையினது மகிமையாலே
காவனத்தில் வசிக்கின்ற மிருகமெல்லாம்
ஆண்பான மதமடங்கி தன்முன்னாக
அப்பனே எதிர் வணங்கி பணியும் பாரு
சாண் பாம்பே யானாலு முந்தனுக்கு
சட்டமுடன் ஏவலுக்கு முன்னாய் நின்று
வீண்பாக முறையாம லடிவணங்கி
வித்தகனே முறைபாடாய் நடக்கும் பாரே
இந்த அதிசய பொன்னூமத்தை மூலிகை கந்தர் முருகனின் மூலிகை
ஆகும்.இம்மூலிகையால் ரசவாதம் செய்யலாம்.இம்மூலிகையை இடித்து பிழிந்து
சாரெடுத்து ரவி என்ற வெயிலில் காய விடவும்.பின்பு
தாமிரம் என்ற செம்பை உருக்கி இதில் சாய்க்க வேண்டும்.
இந்த செம்பை மீண்டும் உருக்கி சாய்க்க வேண்டும். ஒவ்வொரு முறை யும்
புதுச்சாரு ஊற்ற வேண்டும். இது போல் பதினொரு முறை உருக்கி சாய்க்க பசுமையான
தங்கமாகும்.
இம் மூலிகையின் வாசனையால் சிங்கம் மயங்கும், யானை
முதல் அனைத்து மிருகங்களும் வசியமாகும். எதிர் வந்தாலும் அடிவணங்கி
பணியும். பாம்பு போன்ற ஜந்துக்கள் நம் சொல்லுக்கு கட்டுப் படும்.