Thursday, 11 July 2013

அபூர்வ சக்தி ரசமணி செய்முறை எப்படி?? ( பாகம் 01 )

சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதாவது சிவன் சொத்தினை அபகரித்து அனுபவிப்பவர்களது குலம் நாசமாகும் என்பது இதன் பொருளாகும். இது உலகில் பொதுவாழ்வில் சிவன்;கோவில் சொத்தினை அபகரித்து அனுபவிப்பா...ர்களது குலத்தினை நாசம் செய்யும் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

இது சரிதான் என்றாலும், இந்தப் பழமொழியில் உள்ள மறைவான பொருள் வேறு ஒன்றும் உள்ளது. சிவனார் வீரியம், சிவனார் விந்து என்ற பெயர்கள் பாதரசத்திற்கு உண்டு. அத்தகைய பாதரசத்தினை சிவனது சொத்தினை பயன்படுத்துபவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதே மறைபொருளாகும். அவர்களது குலம் எப்படி நாசமாகும் என்பதை இந்தப் கட்டுரையை முழுமையாகப் படிக்கும்போது உங்களுக்குப் புரியும்.

பாதரசத்தினை மருந்துக்கோ, இரசவாதத்திற்கோ பயன்படுத்தும் முன்பு அதன் தோஷங்களை நீக்குவதும், சட்டை எனப்படும் வேறு உலோகக் கலப்புக்களை நீக்குவதும் அவசியமாகும். பாதரசத்தில் எட்டுவகையான தோஷங்கள் உண்டு. அதேபோல் ஏழுவகையான சட்டைகள் உண்டு.

இவற்றை முறைப்படி நீக்கிய பின்னரே இரசத்தினைப் பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் பலவித தீமைகளுக்கும், நோய்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். எட்டுவகையான தோஷங்கள், அவற்றினால் உண்டாகும் நோய்களையும் முதலில் காண்போம்....

தொடரும்..

No comments:

Post a Comment