Thursday, 11 July 2013

ஞான மூலிகை

வள்ளலார் அருளிய ஞான மூலிகைகளுள் தூதுவளைக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சாத்வீக உணவுகளிலேயே மிகவும் நுட்பமான உணவு தூதுவளையாகும். கரிசலாங்கண்ணி, பொற்றலை, கையாந்தகரை, தூதுவளை, வல்லாரை போன்ற ஞான மூலிகைகள் அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமான...ால் புசிக்கப் பெற்று, உலகமெல்லாம் அவரால் பரப்பப்பட்டது.

வள்ளலாருக்கு முன்தோன்றிய சித்தர்கள் மூலிகைகளின் தன்மைகளைப் பற்றிச் சொல்லியிருந்த போதிலும், வள்ளலார் மூலிகைகளின் குணங்களயும் தன்மைகளையும் சொல்லியிருப்பது, படிப்பவருக்குப் பசுமரத்து ஆணிபோல் பதியும்.

வள்ளல் பெருமான் தனது திருவருட்பாவில் நித்திய கரும விதி என்ற அகராதியில், உணவில் பச்சரிசி சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, தூதுவளை, பொன்னாங்கண்ணி போன்றவற்றைச் சேர்க்கும்படி கூறுகிறார்.

தூதுவளைக் கீரையுடன் மிளகு ஒரு பங்கு, சீரகம் காலே அரைக்கால் பங்கு, வெந்தயம் கால் பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு சேர்த்துச் சமைக்க வேண்டும் என்றும்; வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை இத்துடன் சேர்க்க வேண்டாம் என்றும் கூறுகிறார். இதிலிருந்து தூதுவளையின் மகத்துவம் நமக்குப் புலனாகிறது.


1 comment:

  1. casino | DrmCDC
    casino is a 진주 출장샵 unique 춘천 출장안마 casino that offers players a wide array of casino games including 전라북도 출장안마 slots, 김해 출장안마 video poker, table games, keno, blackjack,  Rating: 5 · ‎1 밀양 출장안마 review

    ReplyDelete